விடுதியில் சிறுவன் கழுத்தறுத்து படுகொலை - அதிர்ச்சி சம்பவம்
சிறுவனை கொலை செய்தது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
பாட்னா,
பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டம் கோபால் சவுக் பகுதியில் தனியார் விடுதி உள்ளது. இந்த விடுதியில் தங்கி 7 வயது சிறுவன் கல்வி பயின்று வந்தான்.
இந்நிலையில், விடுதியில் இருந்த சிறுவன் நேற்று மர்ம நபர்களால் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளான். இது குறித்து அறிந்த சிறுவனின் குடும்பத்தினர் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி விடுதி முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுவனை கொலை செய்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.