தங்கும் விடுதியில் கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்த கம்ப்யூட்டர் என்ஜினீயர்... அடுத்து நடந்த பரபரப்பு

ஜெட்ரேலோ ஜேக்கப்புக்கும் மற்றொரு பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.;

Update:2026-01-14 11:48 IST

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூரு எலெக்ட்ரானிக் சிட்டி பகுதியை சேர்ந்தவர் கம்ப்யூட்டர் என்ஜினீயரான ஜெட்ரேலோ ஜேக்கப். இவர் பெங்களூருவில் தனியார் நிறுவனம் ஒன்றில் உயர் பதவியில் பணியாற்றிய வேறு சாதியை சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் ஒரு குழந்தை பிறந்தது.

இதற்கு பின் தம்பதிக்கு இடையே அடிக்கடி சண்டை வர தொடங்கியுள்ளது. மேலும் ஜெட்ரேலோ ஜேக்கப் தனது மனைவியை சாதி பெயரை கூறி திட்டி மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தி வந்துள்ளார். இதற்கிடையில் ஜெட்ரேலோ ஜேக்கப்புக்கும் மற்றொரு பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் அவர்களது பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. மேலும் அவர் கள்ளக்காதலியுடன் சேர்ந்து ரீல்ஸ் வீடியோக்களை எடுத்து சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வந்துள்ளார். மேலும்தனது மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்ததுடன் ஜெட்ரேலோ ஜேக்கப், வீட்டை விட்டு வெளியேறி கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.

இதுகுறித்து அறிந்த அவரின் மனைவி உடனடியாக பெங்களூரு சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதில் தனது கணவர் எனக்கு தெரியாமல் வேறு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாகவும், தன்னை சாதி பெயரை சொல்லி திட்டி அடித்து துன்புறுத்துவதாகவும் கூறியிருந்தார்.

மேலும் நான் அவரின் நடவடிக்கையால் மனரீதியாகவும் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளேன் என்றும் தெரிவித்திருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் ஜெட்ரேலோ ஜேக்கப் தனது கள்ளக்காதலியுடன் எலெக்ட்ரானிக்சிட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதிக்கு சென்றுள்ளார். அங்கு இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர்.

இதுபற்றி அறிந்த ஜெட்ரேலோ ஜேக்கப்பின் மனைவி சம்பவம் பற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் தங்கும் விடுதிக்கு விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினர். இதில் ஜெட்ரேலோ ஜேக்கப் கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். பின்னர் ஜெட்ரேலோ ஜேக்கப்பை கையும், களவுமாக பிடித்து போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்