குடும்ப தகராறில் 11 மாத குழந்தையை கொன்று தாய் தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்

சுஷ்மிதா தனது குழந்தைக்கு விஷம் கொடுத்து கொலை செய்துள்ளார்.;

Update:2026-01-10 21:14 IST

கோப்புப்படம் 

தெலுங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டம் ராமண்ணா பேட்டையை சேர்ந்தவர் யஷ்வந்த் ரெட்டி. இவரது மனைவி சுஷ்மிதா (வயது 27). இந்த தம்பதிக்கு அஸ்வந்த் நந்தன் (11 மாதம்) என்ற குழந்தை உள்ளது. இவர்கள் அஸ்தினாபுரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர். குழந்தை பிறந்தது முதல் சுஷ்மிதா யாருடனும் பேசக்கூடாது, வெளியே செல்லக்கூடாது என்று கூறி அவரது கணவர் துன்புறுத்தி வந்துள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை யஷ்வந்த் ரெட்டி அலுவலகத்திற்குச் சென்ற பிறகு, சுஷ்மிதா தனது குழந்தைக்கு விஷம் கொடுத்து கொலை செய்துள்ளார். பின்னர் அவரும் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து காண்டார்.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சுஷ்மிதாவின் தாய் லலிதா (50 வயது) என்பவரும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். மயங்கிய நிலையில் கிடந்த லலிதாவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

கணவரின் துன்புறுத்தல் காரணமாக தான் சுஷ்மிதா தற்கொலை செய்து கொண்டதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்