பெண்களுடன் ஆபாச நடனமாடிய போலீஸ்காரர் சஸ்பெண்ட்
அஜய்குமார் கடந்த காலங்களில் இதே போல் பல ஆபாச நடன நிகழ்ச்சிகளில் நடனமாடி உள்ளதாக கூறப்படுகிறது.;
திருப்பதி,
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம், காங்கிபாடு, காந்தி குண்டாவை சேர்ந்தவர் அஜய்குமார். இவர் காந்தி பாடு போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக உள்ள முரளி கிருஷ்ணாவிடம் டிரைவராக வேலை செய்துவந்தார்.
இவரது கிராமத்தில் கோந்தென்ம்மா திருவிழா நடந்தது. திருவிழாவின் போது பெண்களின் ஆபாச நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பெண்கள் அரைகுறை ஆடைகளுடன் ஆபாச நடனம் ஆடினர். அப்போது அஜய்குமார் மேடையில் ஏறி பெண்களுடன் நடனம் ஆடினார். இதனை அங்கிருந்தவர்கள் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.
இந்த வீடியோ தற்போது வைரலாகி உள்ளது. இதனைக் கண்ட போலீஸ் உயர் அதிகாரிகள் அஜயகுமாரை சஸ்பெண்டு செய்து உத்தரவு தெரிவித்தனர். அஜய்குமார் கடந்த காலங்களில் இதே போல் பல ஆபாச நடன நிகழ்ச்சிகளில் நடனமாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.