கேரளா: குளத்தில் மூழ்கி சிறுவன் பலி

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரளா: குளத்தில் மூழ்கி சிறுவன் பலி
Published on

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் புலியூர்சலா கிராமத்தை சேர்ந்தவர் முகமது ஷாஜி. இவரது மகன் முகமது நியாஸ் (வயது 12). சிறுவன் முகமது நியாஸ் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்நிலையில், சிறுவன் முகமது நியாஸ் இன்று காலை தனது நண்பர்களுடன் கிராமத்திற்கு அருகே உள்ள குளத்திற்கு குளிக்க சென்றுள்ளான்.

நண்பர்களுடன் குளித்துக்கொண்டிருந்தபோது திடீரென முகமது நியாஸ் தண்ணீரில் மூழ்கியுள்ளான். இதனால் அதிர்ச்சியடைந்த சக சிறுவர்கள் கிராமத்திற்கு விரைந்து சென்று ஊர்மக்களிடம் கூறியுள்ளனர். இதையடுத்து விரைந்து சென்ற கிராமத்தினர் குளத்திற்குள் குதித்து சிறுவன் முகமது நியாசை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மருத்துவமனையில் சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள், முகமது நியாஸ் ஏற்கனவெ உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com