டிட்வா புயல்: புதுச்சேரியில் அனைத்து தனியார் தொழிற்சாலை ஊழியர்களுக்கும் இரவு பணி விடுப்பு

புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று இரவு கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிட்வா புயல்: புதுச்சேரியில் அனைத்து தனியார் தொழிற்சாலை ஊழியர்களுக்கும் இரவு பணி விடுப்பு
Published on

புதுச்சேரி,

'டிட்வா' புயல் இலங்கை மற்றும் அதனையொட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலை கொண்டுள்ளது. 'டிட்வா' புயலின் வேகம் தற்போது அதிகரித்துள்ள நிலையில், மணிக்கு 10 கி.மீ வேக்த்தில் சென்னையை நோக்கி நகர்ந்து வருகிறது. தொடர்ந்து வடக்கு - வடமேற்கில் நகர்ந்து நாளை (நவ.30) காலை வட தமிழ்நாட்டை நெருங்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று இரவு கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கனமழை காரணமாக புதுச்சேரியில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளுக்கும் இரவு பணி விடுப்பு அறிவித்து புதுச்சேரி கலெக்டர் குலோத்துங்கன் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com