பயிற்சியின்போது ஏவுகணை பாகம் கிராமத்தில் விழுந்ததால் பரபரப்பு
இதனால் பல கிலோமீட்டர் தொலைவுக்கு வெடிப்புச் சத்தம் ஏற்பட்டது.;
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தானின் ஜெய்சல்மர் மாவட்டத்தில் உள்ள பொக்ரான் துப்பாக்கிச் சுடும் தளத்தில் பாதுகாப்புப் பயிற்சி நடைபெற்றது. ராணுவப் பயிற்சியின் ஒரு பகுதியாக ஏவப்பட்ட ஏவுகணை, அதன் இலக்கை விட்டு விலகி ஜெய்சல்மரின் லத்தி பகுதிக்கு அருகில் உள்ள பதரியா கிராமத்திலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் விழுந்தது.
இதனால் பல கிலோமீட்டர் தொலைவுக்கு வெடிப்புச் சத்தம் ஏற்பட்டது. இதனால் கிராம மக்கள் பீதியடைந்தனர். இந்த சம்பவத்தில் எந்தவொரு உயிர்சேதமோ அல்லது சொத்துக்களுக்கு சேதமோ ஏற்படவில்லை. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற அதிகாரிகள், ஏவுகணையின் பகுதியை மீட்டு துப்பாக்கிச் சுடும் தளத்திற்கு கொண்டு சென்றனர்.