முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 101-வது பிறந்தநாள் - ஒடிசா கடற்கரையில் சிறப்பு மணல் சிற்பம்

மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் பூரி கடற்கரையில் வாஜ்பாய் மணல் சிற்பத்தை வடிவமைத்துள்ளார்.;

Update:2025-12-26 07:42 IST

பூரி,

இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், கடந்த 1924-ம் ஆண்டு டிசம்பர் 25-ந்தேதி மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் பிறந்தார். அவர் 3 முறை இந்தியாவின் பிரதமராக பதவி வகித்துள்ளார். பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்களில் ஒருவரான வாஜ்பாய், தனது பதவிக்காலத்தை முழுமையாக நிறைவு செய்த முதல் காங்கிரஸ் அல்லாத பிரதமர் ஆவார்.

மேலும், பிரதமர் மொரார்ஜி தேசாயின் மந்திரி சபையில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரியாகவும் வாஜ்பாய் பதவி வகித்துள்ளார். அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 2028-ம் ஆண்டு ஆகஸ்ட் 16-ந்தேதி காலமானார்.

இந்த நிலையில், வாஜ்பாயின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்றைய தினம் ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி சி.பி.ராதகிருஷ்ணன், பிரதமர் மோடி மற்றும் மூத்த பா.ஜ.க. தலைவர்கள் டெல்லியில் உள்ள வாஜ்பாய் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மேலும் ஒடிசாவில் உள்ள பூரி கடற்கரையில், முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 101-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரை கவுரவிக்கும் விதமாக மணல் சிற்பம் வடிவமைக்கப்பட்டது. புகழ் பெற்ற மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் இதனை வடிவமைத்துள்ளார். பொதுமக்கள் இந்த மணல் சிற்பத்தை ஆர்வத்துடன் பார்வையிட்டு சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்