கோவா முன்னாள் முதல்-மந்திரி மாரடைப்பால் மரணம்
பாஜக மூத்த தலைவரான இவர் கோவா வேளாண் மந்திரியாக செயல்பட்டு வந்தார்.;
பனாஜி,
கேவா மாநில முன்னாள் முதல்-மந்திரி ரவி நாயக் (வயது 79). பாஜக மூத்த தலைவரான இவர் கோவா வேளாண் மந்திரியாக செயல்பட்டு வந்தார். இந்நிலையில், பனாஜி அருகே பண்டா நகரில் குடும்பத்துடன் வசித்து வந்த ரவி நாயக்கிற்கு நேற்று இரவு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ரவி நாயக்கை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். ரவி நாயக்கின் மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரின் இறுதிச்சடங்கு இன்று மாலை 3 மணிக்கு நடைபெறும் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.