கோவா: பிட்ஸ் பிலானி விடுதியில் மாணவர் மர்ம மரணம்; ஓராண்டுக்குள் 5-வது சம்பவம்

2024-ம் ஆண்டு டிசம்பரில் இருந்து இதுவரை 5 மாணவர்கள் இதுபோன்று மர்ம மரணம் அடைந்துள்ளனர்.;

Update:2025-09-04 19:52 IST

பனாஜி,

கோவாவின் தெற்கே பிட்ஸ் பிலானி தனியார் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இதன் விடுதியில் தங்கி மாணவர்கள் பலர் படித்து வருகிறார்கள்.

இதேபோன்று தங்கியிருந்த ரிஷி நாயர் என்ற மாணவர் ஒருவர் இன்று காலை 10.45 மணியளவில் உயிரிழந்து கிடந்துள்ளார். அவருடைய மொபைல் போனை தொடர்பு கொண்டபோது, பதில் எதுவும் வரவில்லை. இதுபற்றி தகவல் அறிந்து அதிகாரிகள் விடுதி அறையை உடைத்து உள்ளே சென்றனர்.

அப்போது, படுக்கையில் அசைவின்றி அவர் கிடந்துள்ளார். இந்த மரணத்திற்கான காரணம் பற்றி விசாரிக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி தனியார் பல்கலைக்கழகம் முறைப்படியான அறிக்கை எதனையும் வெளியிடவில்லை.

கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பரில் இருந்து இதுவரை 5 மாணவர்கள் இதுபோன்று மர்ம மரணம் அடைந்துள்ளனர். இது 5-வது சம்பவம் ஆகும்.

இதற்கு முன்பு, ஓம் பிரியன் சிங் (டிசம்பர் 2024), அதர்வ் தேசாய் (மார்ச் 2025), கிருஷ்ணா கசேரா (மே 2025) மற்றும் குஷாக்ரா ஜெயின் (ஆகஸ்ட் 2025) ஆகியோர் அவர்களுடைய விடுதி அறைகளில் உயிரிழந்து கிடந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்