உயர் அதிகாரியுடன் கள்ளத்தொடர்பு: ஆபாச வீடியோக்களை பகிர்ந்த பெண் போலீஸ் - பார்த்து அதிர்ச்சி அடைந்த கணவர்

பெண் போலீஸ் தனது நிர்வாண வீடியோக்களை போலீஸ் அதிகாரியின் செல்போனுக்கு பரிமாறிக் கொண்டிருப்பது தெரியவந்தது.
உயர் அதிகாரியுடன் கள்ளத்தொடர்பு: ஆபாச வீடியோக்களை பகிர்ந்த பெண் போலீஸ் - பார்த்து அதிர்ச்சி அடைந்த கணவர்
Published on

புதுச்சேரி,

காரைக்கால் மகளிர் போலீஸ் நிலையத்தில் 35 வயது பெண் போலீஸ் ஒருவர் பணியாற்றி வருகிறார். இவரது கணவரும் போலீஸ்காரராக உள்ளார்.இந்த நிலையில் அந்த பெண் போலீசுக்கும் போலீஸ் சூப்பிரண்டு ஒருவருக்கும் தொடர்பு ஏற்பட்டது. அவர்கள் அடிக்கடி நேரில் சந்தித்து நெருங்கிய தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.

திருமணமான அந்த போலீஸ் சூப்பிரண்டு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு காரைக்காலில் இருந்து புதுச்சேரிக்கு பணி மாற்றம் செய்யப்பட்டார்.அவர் புதுச்சேரிக்கு சென்று விட்டதால் நேரடியாக இருவரும் பழையபடி தொடர்பில் இருக்க முடியாமல் வருத்தமடைந்தனர்.இருந்தாலும் 2 பேரின் தொடர்பும் நீடித்து வந்தது. அவர்கள் செல்போனில் தொடர்பு கொண்டு நீண்ட நேரம் பேசி வந்தனர். இருவரும் செல்போனில் 'வீடியோ சாட்டிங்' செய்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் பெண் போலீஸ் தனது நிர்வாண வீடியோக்களை போலீஸ் அதிகாரியின் செல்போனுக்கு பரிமாறிக் கொண்டிருப்பது தெரியவந்தது. வீட்டில் அதிக நேரம் செல்போன் பயன்படுத்தி வந்ததை அறிந்த பெண் போலீசின் கணவர் சந்தேகமடைந்தார்.

அவர் மனைவியின் செல்போனை ஆய்வுசெய்த போது அவர் குறிப்பிட்ட போலீஸ் அதிகாரியுடன் நீண்ட நேரம் பேசி இருப்பது தெரியவந்தது. மேலும் அவருடன் வீடியோ சாட்டிங் செய்து நிர்வாண வீடியோக்கள் பகிர்ந்து இருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.இது குறித்து போலீஸ்காரர் ஆபாச வீடியோ ஆதாரங்களுடன் காரைக்கால் மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லட்சுமி சவுஜன்யாவிடம் புகார் அளித்தார்.கள்ளத்தொடர்பு விவகாரம் கணவருக்கு தெரியவந்ததால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் போலீஸ் வீட்டில் பினாயில் குடித்து தற்கொலைக்கு முயன்றார். மயங்கி விழுந்த அவரை மீட்டு காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

புகாரின் அடிப்படையில் சூப்பிரண்டு லட்சுமி சவுஜன்யா புதுச்சேரி போலீஸ் தலைமையகத்துடன் தொடர்பு கொண்டு சம்பந்தப்பட்ட போலீஸ் சூப்பிரண்டை விசாரணைக்கு உட்படுத்த கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் விசாரணை நடத்தி வருகிறார். இந்தசம்பவம் காரைக்கால் மற்றும் புதுச்சேரி போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com