ஹிஜாப் அணிந்த பெண் இந்தியாவின் பிரதமராக வருவார் - அசாதுதீன் ஓவைசி பேச்சு

அசாதுதீன் ஓவைசி ஐதராபாத் தொகுதி எம்.பி. ஆவார்.;

Update:2026-01-10 16:06 IST

மும்பை,

அனைத்து இந்திய மஜ்லிக் இ இதிஹாத் உல் முஸ்லிமின் (எஐஎம்ஐஎம்) கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி. இவர் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் தொகுதி எம்.பி. ஆவார்.

இதனிடையே, மராட்டிய மாநில உள்ளாட்சி தேர்தல் வரும் 15ம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஓவைசியின் கட்சியும் களமிறங்கியுள்ளது.

இந்நிலையில், மராட்டியத்தின் சோலாப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஓவைசி பங்கேற்றார். பொதுக்கூட்டத்தில் ஓவைசி பேசியதாவது, இந்தியாவின் அரசியலமைப்பு சாசனம் அனைத்து சமூக மக்களுக்கும் சம அந்தஸ்து வழங்குகிறது. ஆனால், பாகிஸ்தானின் அரசியலமைப்பு சாசனம் நாட்டின் உயர் அரசியலமைப்பு பதவிகளை ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே வழங்குகிறது. ஹிஜாப் அணிந்த பெண் இந்தியாவின் பிரதமராக ஒருநாள் வருவார். அப்போது நான் உயிருடன் இருப்பேனா? என்பது தெரியது’ என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்