இந்திய ரெயில்வேயின் முதல் பெண் என்ஜின் டிரைவர் பணி ஓய்வு

2023-ம் ஆண்டு மார்ச் 13-ந் தேதி சோலாப்பூர்- மும்பை சி.எஸ்.எம்.டி. இடையேயான முதல் வந்தே பாரத் ரெயிலை இயக்கும் கவுரவமும் அவருக்கு கிடைத்தது.;

Update:2025-10-01 13:52 IST

மும்பை,

இந்திய ரெயில்வேயில் முதல் பெண் என்ஜின் டிரைவராக பணிக்கு சேர்ந்தவர் சுரேகா யாதவ். சத்தாராவை சேர்ந்த இவர், எலெக்ட்ரிகல் என்ஜினீயரிங்கில் டிப்ளமோ படிப்பை முடித்து 1989-ம் ஆண்டு உதவி என்ஜின் டிரைவராக பணியில் சேர்ந்தார்.

ஆசிய அளவிலும் முதல் பெண் என்ஜின் டிரைவர் என்ற பெருமை அவருக்கு உண்டு. 1996-ல் சரக்கு ரெயில் என்ஜின் டிரைவராக பதவி உதவி பெற்றார். அதன்பிறகு அவர் மலைப்பகுதிகளில் எக்ஸ்பிரஸ் ரெயில்களை இயக்குவதிலும் கைதேர்ந்தவர் ஆனார். 2023-ம் ஆண்டு மார்ச் 13-ந் தேதி சோலாப்பூர்- மும்பை சி.எஸ்.எம்.டி. இடையேயான முதல் வந்தே பாரத் ரெயிலை இயக்கும் கவுரவமும் அவருக்கு கிடைத்தது. இந்தநிலையில் தனது 36 ஆண்டு சேவையை நிறைவு செய்து அவர் நேற்று பணி ஓய்வு பெற்றார். அவருக்கு ரெயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் பிரியாவிடை அளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்