பஞ்சாப்: கபடி வீரர் சுட்டுக்கொலை - அதிர்ச்சி சம்பவம்

குர்வீந்தர் சிங் கொலைக்கு பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் தலைமையிலான கும்பல் பொறுப்பேற்றுள்ளது.;

Update:2025-11-05 11:47 IST

சண்டிகர்,

பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டத்தை சேர்ந்தவர் குர்வீந்தர் சிங். இவர் மாவட்ட அளவில் நடைபெறும் கபடி போட்டிகளில் பங்கேற்று புகழ் பெற்றவர் ஆவார்.

இந்நிலையில் குர்வீந்தர் சிங் நேற்று மாலை சமரலா பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், குர்வீந்தர் சிங்கின் உடலை மீட்டு பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பியோடிய கும்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேவேளை, குர்வீந்தர் சிங் கொலைக்கு பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் தலைமையிலான கும்பல் பொறுப்பேற்றுள்ளது. கடந்த சில நாட்களாக பஞ்சாப்பில் விளையாட்டு வீரர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்