ரூ.30 கோடிக்கு ஹெலிகாப்டர் வாங்கிய கர்நாடக பொதுப்பணித்துறை மந்திரி

மந்திரி சதீஷ் ஜார்கிகோளி ஏற்கனவே ஒரு என்ஜின் கொண்ட ஹெலிகாப்டரை சொந்தமாக வைத்துள்ளார்.;

Update:2025-09-21 02:54 IST

பெங்களூரு,

கர்நாடக காங்கிரஸ் ஆட்சியில் பொதுப்பணித்துறை மந்திரியாக இருப்பவர், சதீஷ் ஜார்கிகோளி. பெலகாவி மாவட்டத்தில் இவரது சகோதரர்கள், குடும்பத்தினர் தான் எம்.எல்.ஏ.க்களாக உள்ளனர். இவரது மகள் எம்.பி.யாக இருக்கிறார். மந்திரி சதீஷ் ஜார்கிகோளி ஏற்கனவே ஒரு என்ஜின் கொண்ட ஹெலிகாப்டரை சொந்தமாக வைத்துள்ளார்.

இந்த நிலையில் அவர் புதியதாக ஒரு ஹெலிகாப்டரை வாங்கியுள்ளார். இதன் விலை ரூ.30 கோடி ஆகும். இந்த ஹெலிகாப்டர் இத்தாலி மேட் டபுள் என்ஜின் கொண்டது. இந்த ஹெலிகாப்டரை அவர் பெங்களூரு ஜக்கூரில் உள்ள விமான நிலையத்தில் ஆய்வு செய்தார். அப்போது அவர் அந்த ஹெலிகாப்டரின் செயல்பாடுகள் பற்றி கேட்டறிந்ததுடன், அதில் அமர்ந்து பாா்த்தார். இதுதொடர்பான படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பழைய ஹெலிகாப்டரை விற்றுவிட்டு இந்த புதிய ஹெலிகாப்டரை அவர் வாங்கியுள்ளார். கட்சி பணி மற்றும் அரசியல் பணிக்காக இந்த ஹெலிகாப்டரை அவர் வாங்கியதாக கூறப்படுகிறது. ஏற்கனவே மந்திரி ஜமீர்அகமதுகான், முன்னாள் மந்திரி ஜனார்த்தன ரெட்டி, ஆனந்த் சிங் ஆகியோர் சொந்தமாக ஹெலிகாப்டர்கள் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்