திருமணத்திற்கு மறுத்த காதலியை கழுத்தறுத்து கொன்ற இளைஞர் - அதிர்ச்சி சம்பவம்

காதலியை கொன்றுவிட்டு தப்பிச்சென்ற அலோக்கை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.;

Update:2025-11-23 19:03 IST

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் லக்னோ மாவட்டம் மோகன்லால் கஞ்ச் பகுதியை சேர்ந்த இளைஞர் அலோக். இவரும் அதே பகுதியை சேர்ந்த பிரியான்ஷ் (வயது 19) என்ற இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இதனிடையே, கடந்த சில நாட்களாக காதல் ஜோடி இடையே கருத்து மோதல் நிலவி வந்துள்ளது.

இந்நிலையில், அலோக் இன்று தனது காதலி பிரியான்ஷியின் வீட்டிற்கு சென்றுள்ளான். அங்கு தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி பிரியான்ஷியிடம் அலோக் கேட்டுள்ளார். ஆனால், காதலன் அலோக்கை திருமணம் செய்ய பிரியான்ஷி மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றிய நிலையில் அலோக் தான் மறைத்து கொண்டு வந்த கத்தியால் காதலி பிரியான்ஷியின் கழுத்தை அறுத்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த பிரியான்ஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பிரியான்ஷியை கொன்ற அலோக் அங்கிருது தப்பிச்சென்றார்.

தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், பிரியான்ஷியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காதலியை கொன்றுவிட்டு தப்பிச்சென்ற அலோக்கை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்