மராட்டியத்தில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வெளிநாட்டினர் 6 பேர் கைது

கைது செய்யப்பட்டவர்களில் 5 நைஜீரியாவை சேர்ந்தவர்கள் ஆவர்;

Update:2026-01-11 16:03 IST

மும்பை,

இந்தியாவில் சட்டவிரோதமாக பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் தங்கியுள்ளனர். அவர்களை கண்டறிந்து கைது செய்யும் நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் வெளிநாட்டினர் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் நேற்று முன் தினம் முதல் தானேவின் கார்கர் பகுதியில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். சோதனையில் அப்பகுதியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த 6 வெளிநாட்டினரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் 5 நைஜீரியாவை சேர்ந்தவர்கள் என்பதும் அவர்கள் அனைவரும் விசா இன்றி தங்கி இருந்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து 6 பேரையும் போலீசார் சிறையில் அடைத்தனர். மேலும், வெளிநாட்டினர் சட்டவிரோதமாக தங்க வீடு வாடகைக்கு கொடுத்த 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்