3 முறை விண்வெளியில் பறக்கும் வாய்ப்பு: நம்பமுடியாத பெருமை - சுனிதா வில்லியம்ஸ் நெகிழ்ச்சி

சுனிதா வில்லியம்ஸ் தற்போது இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டு உள்ளார்.;

Update:2026-01-21 21:05 IST

புதுடெல்லி,

இந்தியா வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் (வயது 60). இவர் அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு கழகமான நாசாவில் 27 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இந்தநிலையில், சுனிதா வில்லியம்ஸ் ஓய்வு பெற்றுள்ளதாக நாசா அறிவிக்கப்பட்டுள்ளது. சுனிதா மொத்தம் 608 நாட்கள் விண்வெளியில் தங்கி இருந்துள்ளார்.

சுனிதா வில்லியம்சின் தந்தை தீபக் பாண்ட்யா குஜராத்தின் மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள ஜுலா சன் பகுதியை சேர்ந்தவர். நரம்பியல் நிபுணரான அவர் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து, ஸ்லோவேனியாவைச் சேர்ந்த போனி என்பவரை மணந்தார்.

ஓகியோவின் யூக்ளிட் நகரில் பிறந்த சுனிதா வில்லியம்ஸ், அமெரிக்க கடற்படை அகாடமியில் இயற்பியல் அறிவியலில் இளங்கலைப் பட்டமும், மெல்போர்னில் உள்ள புளோரிடா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் பொறியியல் மேலாண்மை யில் முதுகலைப் பட்டமும் பெற்றார். அமெரிக்க கடற்படையில் அதிகாரியாக பணியாற்றிய சுனிதா வில்லியம்ஸ் 1998-ம் ஆண்டு நாசாவில் பணியில் சேர்ந்தார்.

இதற்கிடையே சுனிதா வில்லியம்ஸ் கூறியதாவது:-

என்னை அறிந்த அனைவருக்கும் விண்வெளிதான் எனக்கு மிகவும் பிடித்தமான இடம் என்பது தெரியும். நாசாவில் பணியாற்றியதும், 3 முறை விண்வெளியில் பறக்கும் வாய்ப்பு கிடைத்ததும் ஒரு நம்பமுடியாத பெருமையாகும்.

நாசாவில் எனக்கு ஒரு அற்புதமான 27 ஆண்டு காலப் பணி வாழ்க்கை அமைந்தது.அதற்கு முக்கியக் காரணம் எனது சக ஊழியர்களிடமிருந்து நான் பெற்ற அற்புதமான அன்பும் ஆதரவும்தான். சர்வதேச விண்வெளி நிலையம், அங்குள்ள மக்கள், பொறியியல் மற்றும் அறிவியல் ஆகியவை உண்மையிலேயே பிரமிக்க வைக்கின்றன. அவை நீலவு மற்றும் கிரகத்திற்கான அடுத்தகட்ட ஆய்வுகளை சாத்தியமாக்கி உள்ளன.

நாங்கள் அமைத்த அடித் தளம் இந்தத் துணிச்சலான நடவடிக்கைகளை இன்னும் சற்றே எளிதாக்கியிருக்கும் என்று நம்புகிறேன். நாசா-வரலாறு படைப்பதை ஆவலுடன் காணக் காத்திருக்கிறேன் என்றார். சுனிதா வில்லியம்ஸ் தற்போது இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டு உள்ளார். அவர்டெல்லியில் உள்ள அமெரிக்க மையத்தில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்று தனது வாழ்க்கையில் இந்தியாவின் முக்கியத்துவம் குறித்துப் பேசினார். மேலும் அவர் மறைந்த விண்வெளி வீராங்கனை கல்பனா தாயாரையும், சகோதரியையும் சந்தித்து பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்