தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்களுக்கு நாளை மறுநாள் பிரதமர் மோடி விருந்து
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 1ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.;
டெல்லி,
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 1ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. குளிர்கால கூட்டத்தொடர் 19ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது.
இந்நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி விருந்து அளிக்க உள்ளார். நாளை மறுதினம் (11ம் தேதி) கூட்டணி கட்சி எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி விருந்து அளிக்கிறார்.
இந்த விருந்தில் பங்கேற்குமாறு அதிமுக எம்.பி.க்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் பிரதமர் மோடி அளிக்கும் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.