பஞ்சாப்: பயணிகள் ரெயிலில் பயங்கர தீ விபத்து
ரெயிலின் 3 பெட்டிகளில் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் பாதிப்பு இல்லை.;
அமிர்தசரஸ்,
பஞ்சாப் மாநிலம் சிர்ஹந்தில் பயணிகள் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அமிர்தசரஸில் இருந்து சஹர்சாவுக்கு சென்ற ரயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஒரு பெட்டியில் இருந்து புகை வந்ததும் துரிதமாக செயல்பட்ட அதிகாரிகள் ரயிலின் பிற பெட்டிகளை அதிலிருந்து துண்டித்துள்ளனர். எனினும், கொழுந்து விட்டு எரிந்த தீ 3 பெட்டிகள் வரை பரவியது. அதிர்ஷ்டவசமாக இந்த தீ விபத்தில் பயணிகள் யாருக்கும் பாதிப்பு இல்லை.
இது தொடர்பாக ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது: ரெயிலின் 19-வது பெட்டியில் புகை வந்ததை பார்த்த பயணிகள் உடனடியாக அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தியுள்ளனர். புகை அளவுக்கு அதிகமாக வந்ததும் பயணிகள் பெட்டியில் இருந்து வெளியே குதித்தனர். இதில் சில பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும் உடனடியாக சென்ற தீ அணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது” என்றார்.