திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முகேஷ் அம்பானி சாமி தரிசனம்

திருப்பதியில் உலகப்புகழ் பெற்ற ஏழுமலையான் கோவில் உள்ளது.;

Update:2025-11-09 09:18 IST

திருப்பதி,

ஆந்திர மாநிலம் திருப்பதியில் உலகப்புகழ் பெற்ற ஏழுமலையான் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரும் இந்தியாவின் பெரும் பணக்காரருமானவர் முகேஷ் அம்பானி இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இன்று அதிகாலை ஏழுமலையான் கோவிலுக்கு வந்த முகேஷ் அம்பானி சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்