திருமணமான 2வது நாளில் டி.ஆர்.டி.ஓ. விஞ்ஞானி சடலமாக மீட்பு - அதிர்ச்சி சம்பவம்

ஆதித்ய வர்மாவுக்கும் நவ்யா என்ற இளம்பெண்ணுக்கு திருமணம் நடைபெற்றது.
திருமணமான 2வது நாளில் டி.ஆர்.டி.ஓ. விஞ்ஞானி சடலமாக மீட்பு - அதிர்ச்சி சம்பவம்
Published on

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆதித்ய வர்மா (வயது 28). இவர் கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள ராணுவம் மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பான டி.ஆர்.டி.ஓ.வில் விஞ்ஞானியாக செயல்பட்டு வந்தார். இதனிடையே, ஆதித்ய வர்மாவுக்கும் நவ்யா என்ற இளம்பெண்ணுக்கு கடந்த 25ம் தேதி திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், திருமணமான 2வது நாளில் ஆதித்ய வர்மா மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். அதன்படி, கடந்த 27ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு வீட்டில் உள்ள பாத்ரூமிற்கு ஆதித்ய வர்மா சென்றுள்ளார். ஆனால் வெகுநேரமாகியும் அவர் பாத்ரூமை விட்டு வெளியே வரவில்லை.

இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர், பாத்ரூம் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அங்கு ஆதித்ய வர்மா மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அவரை மீட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு ஆதித்ய வர்மாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் ஆதித்ய வர்மாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com