ஒடிசாவில் மாற்றுத்திறனாளி சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை

சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடிய 3 பேரை இன்று கைது செய்தனர்.;

Update:2026-01-06 21:22 IST

புவனேஷ்வர்,

ஒடிசா மாநிலம் ராயகண்டா மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி சிறுமி நேற்று மதியம் தனது கிராமத்திற்கு அருகே உள்ள வனப்பகுதிக்கு விறகு சேகரிக்க சென்றுள்ளார். அப்போது, அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல் சிறுமியை வனப்பகுதியில் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றது.

இதையடுத்து, வீட்டிற்கு வந்த சிறுமி தனக்கு நடந்த கொடூரம் குறித்து தாயாரிடம் கூறி அழுதார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார் உடனடியாக போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடிய 3 பேரை இன்று கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட 3 பேரின் பெயர் உள்ளிட்ட விவரங்களை போலீசார் இதுவரை வெளியிடவில்லை. 

Tags:    

மேலும் செய்திகள்