“பிறந்தநாள் பரிசு தருகிறேன்” என கூறி மாணவியை படுக்கை அறைக்குள் அழைத்து சென்ற ஆசிரியர்..!

பிறந்தநாள் பரிசை வீட்டில் வைத்துவிட்டு வந்து விட்டதாகவும், அதனை வாங்க தனது வீட்டுக்கு வருமாறும் ஆசிரியர் அழைப்பு விடுத்தார்.;

Update:2026-01-13 06:36 IST

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் கோழிக்கோடு செருவனூர் நல்லாம் பகுதியை சேர்ந்த வர் சஜீந்திர பாபு (வயது50). இவர் அந்த பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். அந்த பள்ளியில் 9-ம் வகுப்பு படித்த மாணவி ஒருவருக்கு கடந்த 4-ந்தேதி பிறந்தநாள் வந்திருக்கிறது. அந்த மாணவிக்கு ஆசிரியர் சஜீந்திரபாபு பள்ளியில் வைத்து பிறந்தநாள் வாழ்த்து கூறியிருக்கிறார்.

மேலும் பிறந்தநாள் பரிசை வீட்டில் வைத்துவிட்டு வந்து விட்டதாகவும், அதனை வாங்க தனது வீட்டுக்கு வருமாறும் கூறியிருக்கிறார். அவரது அழைப்பு "அன்பின் அழைப்பு" என நினைத்து ஆசிரியருடன் அவரது வீட்டுக்கு 9-ம் வகுப்பு மாணவி சென்றார். தனது இரு வாகனத்திலேயே மாணவியை ஆசிரியர் தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.

வீட்டுக்குள் சென்றதும் படுக்கை அறைக்குள் வரச் செய்து மாணவியிடம் தவறாக நடந்திருக்கிறார். மேலும் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றிருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி ஆசிரியரின் பிடியில் இருந்து தப்பி, வீட்டை விட்டு வெளியே ஓடிவந்து விட்டார்.

பிறந்தநாள்பரிசு தருவதாக கூறி வீட்டுக்கு அழைத்துச் சென்று ஆசிரியர் தன்னிடம் தவறாக நடந்த சம்பவத்தை அந்த மாணவி உடனடியாக யாரிடமும் கூறவில்லை. சில நாட்களுக்கு பிறகு தனது உறவினர் ஒருவரிடம் தெரிவித்தார். அவர் அதுபற்றி மாணவியின் குடும்பத்தினரிடம் தெரிவித்தார்.

அதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், மாணவியிடம் அத்துமீறிய ஆசிரியர் சஜீந்திரபாபு மீது போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் விசாரணை நடத்திய போலீசார், ஆசிரியர் சஜீந்திரபாபு மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்