விஜயதசமி பண்டிகை வாழ்த்துகள் - ராகுல் காந்தி

அநீதி, கொடுங்கோன்மைக்கு எதிரான வெற்றியைக்குறிக்கும் பண்டிகையே விஜயதசமி என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.;

Update:2025-10-02 09:10 IST

புதுடெல்லி,

நாடு முழுவதும் இன்று விஜயதசமி (தசரா) பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாட்டு மக்களுக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

நாட்டு மக்கள் அனைவருக்கும் விஜயசதமியின் இதயப்பூர்வமான வாழ்த்துகள். அநீதி, கொடுங்கோன்மைக்கு எதிரான வெற்றியைக்குறிக்கும் பண்டிகையே விஜயதசமி. அகங்காரத்தை ஒழித்து, அனைவரின் வாழ்க்கையில் நல்லிணக்கம், இரக்கத்தை கொண்டு வரட்டும் என அதில் பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்