பீகாரில் பதிவானது ஆட்சிக்கு ஆதரவான வாக்கு: மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான்

65 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.;

Update:2025-11-08 01:35 IST


பாட்னா,

பீகார் சட்டசபை முதல்கட்ட தேர்தலில் 65 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. இதுகுறித்து மத்திய மந்திரியும், பீகார் தேர்தல் பா.ஜனதா பொறுப்பாளருமான தர்மேந்திர பிரதான் ஒரு செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பீகார் தேர்தலில் ஆட்சிக்கு ஆதரவான வாக்குகள் பதிவாகி இருப்பதை காட்டுகிறது. கடந்த காலங்களில், பெருமளவில் திரண்டு வந்து ஆட்சிக்கு ஆதரவாக வாக்களித்த உதாரணங்கள் இருக்கின்றன. பீகாரிலும் அதேதான் நடந்துள்ளது. பிரதமர் மோடி, நிதிஷ்குமார் ஆகியோர் மீதான மக்களின் நம்பிக்கை பாறைபோல் உறுதியாக இருக்கிறது. பெண்கள் அதிகமாக வந்து வாக்களித்துள்ளனர். பேட்டி அளித்தவர்கள், வளர்ச்சி மற்றும் பாதுகாப்புக்கு வாக்களித்ததாக தெரிவித்தனர். எந்த பக்கம் காற்று வீசுகிறது என்பதற்கு இது தெளிவான அறிகுறி.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்