திருமணத்துக்கு மறுத்த இளம்பெண் பலாத்காரம் - வாலிபர் கைது

பிரதீப் பூஜாரி இளம்பெண் ஒருவரை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார்.
திருமணத்துக்கு மறுத்த இளம்பெண் பலாத்காரம் - வாலிபர் கைது
Published on

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் உடுப்பி தாலுகா இரியடுக்கா போலீஸ் எல்லைக்குட்பட்ட நாயர்கோடு பகுதியை சேர்ந்தவர் பிரதீப் பூஜாரி (வயது 26). இவர் அதேப்பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். பிரதீப்பின் காதலை அந்த இளம்பெண் ஏற்கவில்லை. ஆனாலும் பிரதீப், அந்த இளம்பெண்ணை விடாமல் பின்தொடர்ந்து சென்று தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது.

இதுகுறித்து இளம்பெண் இரியடுக்கா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த பிறகும், பிரதீப் இளம்பெண்ணுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்தப்பகுதியில் நடந்து சென்ற இளம்பெண்ணை வழிமறித்த பிரதீப், தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி வலியுறுத்தி உள்ளார். இதற்கு இளம்பெண் மறுத்ததாக தெரிகிறது.

இதனால் அவர் இளம்பெண்ணை மறைவான பகுதிக்கு தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து இளம்பெண் உடுப்பி மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரதீப்பை கைது செய்தனர். பின்னர் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com