தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை

புதுவை குயில்நகரில் மனைவி இறந்த துக்கத்தில் முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update:2023-03-26 23:08 IST

புதுச்சேரி

புதுச்சேரி சாரம் கவிக்குயில் நகரை சேர்ந்தவர் வைத்திலிங்கம் (வயது 93). அவரது மனைவி கலியம்மாள். இந்த நிலையில் கலியம்மாள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் வைத்திலிங்கம் மன வேதனையில் இருந்தார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்