மதுரை மாவட்டத்தில் 10 துணை வட்டாட்சியர்களுக்கு பதவி உயர்வு
மதுரை மாவட்டத்தில் 10 துணை வட்டாட்சியர்கள் தற்காலிக வட்டாட்சியராக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.;
மதுரை மாவட்டத்தில் 10 துணை வட்டாட்சியர்கள் தற்காலிக வட்டாட்சியராக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
இது தொடர்பாக, மதுரை மாவட்ட கலெக்டர் கே.ஜே.பிரவின்குமார் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:-
மதுரை டாஸ்மாக் உதவி மேலாளர் கு.கமலேஷ், மதுரை சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலக தனி வட்டாட்சியராக நியமிக்கப்படுகிறார்.
கல்லக்குடி வட்ட வழங்கல் அலுவலர் ஞா.சித்ரகலா, உசிலம்பட்டி தனி வட்டாட்சியராக நியமிக்கப்படுகிறார். உசிலம்பட்டி தலைமையிடத்து துணை வட்டாட்சியர் க.தாணுமூர்த்தி, மதுரை விமான நிலைய விரிவாக்க தனி வட்டாட்சியராக நியமிக்கப்படுகிறார். மதுரை மேற்கு தலைமையிடத்து துணை வட்டாட்சியர் வீ.சுந்தரவேல், மதுரை தேசிய நெடுஞ்சாலைகள் அலுவலக தனி வட்டாட்சியராக நியமிக்கப்படுகிறார்.
உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலக தலைமை உதவியாளர் ரா.தாமோதரன், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. கழகம் (மதுரை) தனி வட்டாட்சியராக நியமிக்கப்படுகிறார். மதுரை கலெக்டர் அலுவலக தலைமை உதவியாளர் ச.முகிபாலன், மதுரை நெடுஞ்சாலைகள் அலுவலக தனி வட்டாட்சியராக நியமிக்கப்படுகிறார். வாடிப்பட்டி வட்டாட்சியர் அலுவலக தலைமையிடத்து துணை வட்டாட்சியர் ஆ.நாகராணி, மதுரை மேற்கு நகர நிலவரித் திட்ட தனி வட்டாட்சியராக நியமிக்கப்படுகிறார்.
உசிலம்பட்டி வட்டாட்சியர் அலுவலக தலைமையிடத்து துணை வட்டாட்சியர் ச.ந.மகேந்திரபாபு, மதுரை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக தனி வட்டாட்சியராக நியமிக்கப்படுகிறார். மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக தலைமை உதவியாளர் அ.பிரேம்கிஷோர், மதுரை நெடுஞ்சாலைகள் அலுவலக தனி வட்டாட்சியராக நியமிக்கப்படுகிறார். மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக தலைமை உதவியாளர் ஜெ.கார்த்திகேயன், மதுரை மாவட்ட சிறப்பு வருவாய் அலுவலர் (நில எடுப்பு) தனி வட்டாட்சியராக நியமிக்கப்படுகிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.