திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்களை அச்சுறுத்தி வந்த 10 குரங்குகள் கூண்டு வைத்து பிடிப்பு

விடுமுறை தினத்தையொட்டி திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.;

Update:2025-10-06 08:45 IST

திருவள்ளூர்,

திருத்தணி முருகன் கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து விட்டு செல்வது வழக்கம். விடுமுறை தினம், விசேஷ நாட்களில் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த நிலையில் தொடர் விடுமுறை காரணமாக பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

நேற்று விடுமுறை தினம் என்பதால் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர். பொதுவழியில் பக்தர்கள் நீண்ட வரிசையில் 3 மணி நேரம் காத்திருந்து முருக பெருமானை தரிசித்தனர். அப்போது அங்கு சுற்றிதிரியும் சில குரங்குகள் பக்தர்களை அச்சுறுத்தி வந்தது.

இந்த நிலையில், முருகன் கோவிலில் சாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்களை அச்சுறுத்தி வந்த 10 குரங்குகளை திருத்தணி வனத்துறையினர் நேற்று கூண்டு வைத்து பிடித்தனர். பின்னர் பிடிபட்ட குரங்குகளை ஆந்திர வனப்பகுதியில் வீட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்