11ம் வகுப்பு மாணவன் குத்திக்கொலை - அதிர்ச்சி சம்பவம்

சந்துரு தனது கையில் இருந்த ஒரு கூர்மையான கம்பியால் மாணவனை குத்தினார்.;

Update:2025-04-28 14:49 IST

கன்னியாகுமரி அருகே மாதவபுரத்தை சேர்ந்தவர் விஷ்ணு பரத். இவர் தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது தேர்வு எழுதிவிட்டு தேர்வு முடிவிற்கு காத்திருக்கிறார்.

இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள கோவிலில் திருவிழா நடைபெற்று வந்தது. இந்த விழாவில் பங்கேற்க விஷ்ணு பரத் கோவிலுக்கு சென்றார். அப்போது சாமிநாதபுரம் பகுதியை சேந்த ஆட்டோ டிரைவர் சந்துரு அங்கு குடிபோதையில் வந்தார்.

அங்கிருந்த விஷ்ணுவிடம் தகராறு செய்தார். இந்த தகராறு முற்றிய நிலையில் சந்துரு தனது கையில் இருந்த ஒரு கூர்மையான கம்பியால் மாணவனை குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தால் திருவிழா பாதியிலேயே நின்றுவிட்டது. இதனையடுத்து ஆட்டோ டிரைவர் சந்துரு தலைமறைவானார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசர் கூடங்குளத்தில் தலைமறைவாக இருந்த ஆட்டோ டிரைவர் சந்துருவை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்