13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - பெயிண்டர் கைது

சிறுமி வீட்டில் தனியாக இருக்கும்போது, பெயிண்டர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.;

Update:2025-04-21 07:52 IST

சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்தவர் விஜயகுமார்(வயது 47). பெயிண்டரான இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளன. கருத்துவேறுபாடு காரணாமாக அவரது மனைவி, விஜயகுமாரை விட்டு பிரிந்து, குழந்தைகளுடன் தனியாக வசித்து வருவதாக தெரிகிறது.

இந்தநிலையில் விஜயகுமார், 8-ம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவி, வீட்டில் தனியாக இருக்கும்போது, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுபற்றி மாணவியின் தாயார் அளித்த புகாரின்பேரில் புளியந்தோப்பு அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விஜயகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்