17 வயது சிறுமி கர்ப்பம்: காதல் கணவர் மீது போக்சோ வழக்கு

17 வயது சிறுமி கர்ப்பமாக இருப்பது குறித்து திருத்தணி மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகாவை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து 17 வயது சிறுமி கர்ப்பமாக இருப்பது குறித்து திருத்தணி மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர்.

இதுகுறித்து சிறுமியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பிரசாந்த் (24 வயது) என்பவர் சிறுமியை காதல் திருமணம் செய்து கர்ப்பமாக்கியது தெரிந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் பிரசாந்த் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com