கோவில்பட்டியில் 2 கிலோ கஞ்சா, பைக் பறிமுதல்: வாலிபர் கைது

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் திருநெல்வேலி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆவல்நத்தம் விலக்கு பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.;

Update:2025-12-09 21:30 IST

கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டி.எஸ்.பி. வெங்கட்ராஜ் மேற்பார்வையில் கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பிரேமா தலைமையிலான போலீசார் இன்று கோவில்பட்டி மதுவிலக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருநெல்வேலி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆவல்நத்தம் விலக்கு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு சந்தேகப்படும்படி பைக்கில் வந்தவரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். அதில் அவர் கோவில்பட்டி பாரதிநகரை சேர்ந்த மாடசாமி(எ) ராதாகிருஷ்ணன் மகன் திலீபன்(எ) மனோகர் (வயது 26) என்பதும், அவர் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

உடனடியாக போலீசார் திலீபன்(எ) மனோகரை கைது செய்து அவரிடமிருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்