தமிழ்நாடு காவல்துறையில் 3 அதிகாரிகள் பணியிட மாற்றம்

சென்னை வடக்கு போக்குவரத்து துணை ஆணையராக விஷ்வேஸ் சாஸ்த்ரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.;

Update:2025-01-23 18:11 IST

சென்னை,

நிர்வாக காரணங்களுக்காக அவ்வப்போது தமிழக அரசின் சார்பில் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், தமிழக காவல்துறையில் பணியாற்றி வந்த 3 அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார் இன்று (23.01.2025) உத்தரவிட்டுள்ளார்.

அந்த உத்தரவில், "சென்னை வடக்கு போக்குவரத்து துணை ஆணையராக விஷ்வேஸ் சாஸ்த்ரி (ஐ.பி.எஸ். தரநிலை) நியமிக்கப்படுகிறார். சென்னை தெற்கு போக்குவரத்து துணை ஆணையராக குமார் நியமிக்கப்படுகிறார். நெல்லை நகர துணை ஆணையராக விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

Tags:    

மேலும் செய்திகள்