கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான 6 வழக்குகள்: சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.;
கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த மாதம் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. மேலும், கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன.
இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் இன்று 6 வழக்குகள் விசாரணைக்கு வர உள்ளன. அதன்படி, சிபிஐ விசாரணை கோரிய மனுக்கள், தவெக நிர்வாகிகள் முன்ஜாமீன் கோரிய மனுக்கள், மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கைக்கு உத்தரவிட கோரிய மனுக்கள், ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிரான வழக்கு உள்பட 6 வழக்குகள் சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.
சில வழக்கு விவரம்: -
த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்தின் முன்ஜாமீன் மனு
கரூர் மாவட்ட கலெக்டர், எஸ்.பி.க்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கோரிய மனு
வன்முறையை தூண்டும் விதமாக கருத்து பதிவிட்ட ஆதவ் அர்ஜுனா மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி அவர் தாக்கல் செய்த மனு