9-ம் வகுப்பு மாணவிக்கு திருமணம்: வாலிபர் மீது போக்சோ வழக்கு

சிறுமியை ஆசைவார்த்தை கூறி ஏமாற்றி வாலிபர் திருமணம் செய்து கொண்டார்.
9-ம் வகுப்பு மாணவிக்கு திருமணம்: வாலிபர் மீது போக்சோ வழக்கு
Published on

சேலம்,

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள காட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் வல்லரசு (வயது 24). இவர், 9-ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய விரிவாக்க அலுவலர், ஆத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி சிறுமியை திருமணம் செய்த வல்லரசு மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com