மதுபோதையில் வாலிபர் ஓட்டிய கார்.. பிடிக்க சென்ற போலீஸ்காரருக்கு நேர்ந்த விபரீதம்

மதுபோதையில் வாலிபர் ஓட்டிய கார், போலீஸ்காரரின் இரு சக்கர வாகனத்தில் மோதி இழுத்து சென்றது.;

Update:2025-12-09 21:38 IST

சென்னை,

மடிப்பாக்கம் போலீசில் போக்குவரத்து காவலராக பணியாற்றி வந்தவர் மேகநாதன். இவர் நேற்று இரவு பள்ளிக்கரணை கைவெளி பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்த முயன்றார். ஆனால் கார் நிற்காமல் சென்றது.

இதனால் சந்தேகம் அடைந்த போலீஸ்காரர் மேகநாதன் தனது மோட்டார் சைக்கிளில் அந்த காரை விரட்டி சென்றார். பள்ளிக்கரணை மேம்பாலம் அருகே காரை மடக்கி நிறுத்த முயன்றார். ஆனால் கார் கட்டுப்பாட்டை இழந்து போலீஸ்காரர் மேகநாதனின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் காரின் சக்கரத்தில் சிக்கிய போலீஸ்காரர் மேகநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனால் காரில் இருந்த சாய்ராம்(32) என்பவர் அதிர்ச்சி அடைந்தார். தலைமைறைவான அவர் இது குறித்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

சாய்ராம் மது போதையில் இருந்ததால் போலீசார் வாகன தணிக்கையில் இருந்து தப்பித்து தாறுமாறாக காரை ஓட்டியபோது போலீஸ்காரர் மேகநாதன் பலியாகி இருப்பது தெரிந்தது. இதுதொடர்பாக பள்ளிக் கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சாய்ராமை கைது செய்து அவர் மீது விபத்து ஏற்படுத்தி விட்டு ஓடுதல் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்