திருவள்ளூரில் சரித்திர பதிவேடு குற்றவாளி வெட்டிக்கொலை - அதிர்ச்சி சம்பவம்
நவீனை கொலை செய்துவிட்டு தப்பியோடிய 2 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.;
திருவள்ளூர் மாவட்டம் மணவாளநகர் பகுதியை சேர்ந்தவர் நவீன். சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது மணவாளநகர் போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி, அடிதடி உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், மணவாளநகர் அருகே எம்ஜிஆர் நகர் ஏரிக்கரை பகுதியில் நேற்று இரவு நவீன் நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர் நவீனை சரமாரியாக வெட்டினர். மேலும், நவீனின் தலையில் கல்லை போட்டு தாக்கினர். இதில் நவீன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
இந்த கொலை தொடர்பாக தகவலறிந்த போலீசார் விரைந்து சென்று நவீனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், நவீனை கொலை செய்துவிட்டு தப்பியோடிய 2 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.