குடத்தில் தலை சிக்கி பரிதவித்த நாய் - நீண்ட போராட்டத்திற்கு பின் மீட்பு
தலையை எடுக்க முடியாத நிலையில், குடத்துடன் நாய் அங்கும் இங்கும் ஓடி தவித்து கொண்டிருந்தது.;
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே பாக்குடியை சேர்ந்தவர் கணேசன். இவர் வீட்டில் நாய் வளா்த்து வருகிறார். இந்நிலையில் அந்த நாய் வீட்டுக்கு வெளியே வைத்திருந்த குடத்தில் தண்ணீர் குடிக்க முயன்றபோது எதிர்பாராத விதமாக குடத்துக்குள் நாயின் தலை சிக்கி கொண்டது. தலையை எடுக்க முடியாத நிலையில், குடத்துடன் நாய் அங்கும் இங்கும் ஓடி தவித்து கொண்டிருந்தது.
இதைப்பார்த்த கணேசன் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உதவியுடன் குடத்தில் சிக்கிய நாயின் தலையை வெளியே எடுக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதுகுறித்து இலுப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் நிலைய அலுவலர் மகேந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து குடத்தில் இருந்து லாவகமாக நாயின் தலையை எடுத்து மீட்டனர். பின்னர் அங்கிருந்து நாய் துள்ளி குத்தித்து ஓடியது.