நடிகர் ராஜேஷ் மறைவு: அன்புமணி ராமதாஸ், வைகோ இரங்கல்

ராஜேஷின் திடீர் மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.;

Update:2025-05-29 16:42 IST

சென்னை,

தமிழ்த் திரையுலகின் மூத்த நடிகரான ராஜேஷுக்கு (75 வயது) இன்று காலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். நடிகர் ராஜேஷின் உடல் சென்னை, ராமாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ராஜேஷின் திடீர் மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு நடிகர்கள், அரசியல் தலைவர்கள் இரங்கள் தெரிவித்து வருகின்றனர். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி;

அன்புமணி ராமதாஸ்; மூத்த திரைப்பட நடிகரும், தமிழ்நாடு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் தலைவருமான ராஜேஷ் உடல் நலக்குறைவால் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

திரையுலகைக் கடந்து சமூகம், இயற்கை, நலவாழ்வு ஆகியவை குறித்து மிகுந்த ஆர்வமும், அக்கறையும் கொண்டவர் ராஜேஷ். அவரது மறைவு அவர் சார்ந்த துறைகளுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், திரையுலகினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

வைகோ; கலை உலகில் சிறந்த குணச்சித்திர நடிகரும், எழுத்தாளருமான சகோதரர் ராஜேஷ் மறைந்த செய்தி அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. பழகுவதற்கு இனிய பண்பாளரான ராஜேஷ் அவர்களின் மறைவால் துயர்படும் குடும்பத்தாருக்கும், உற்றார் உறவினருக்கும், கலை உலக நண்பர்களுக்கும் மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

 

Tags:    

மேலும் செய்திகள்