பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு ஆதவ் அர்ஜுனா மரியாதை

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு ஆதவ் அர்ஜுனா மரியாதை செலுத்தினார்.;

Update:2025-10-30 18:14 IST

சென்னை,

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118-ஆவது ஜெயந்தி விழா, 63-ஆவது குருபூஜை விழா இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவச் சிலைக்கு, தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இது தொடர்பாக ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

நாட்டின் விடுதலைக்காகப் போராடியவர், மக்கள் நல அரசியலுக்கு அடையாளமாகத் திகழ்ந்தவர், தேசம் போற்றும் தலைவராக உயர்ந்தவர் பசும்பொன் முத்துராமலிங்கம் பெருமகனார் ஜெயந்தியை முன்னிட்டு, சென்னை நந்தனத்தில் உள்ள அவர் திருவுருவச் சிலைக்குக் கழக துணைப் பொதுச்செயலாளர்

ராஜ் மோகன், மாவட்ட கழக செயலாளர் கே.வி. தாமு மற்றும் கழகத் தோழர்கள் ஆகியோரோடு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்