பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் நிர்வாகிகள் போராட்டம்

தமிழக வெற்றிக் கழக தலைமை அலுவலக்தில் அக்கட்சி நிர்வாகிகள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update:2025-12-14 14:44 IST

சென்னை,

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன.

பிரசாரம், பொதுக்கூட்டம், நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை, கட்சி கட்டமைப்பை வலுப்படுத்துதல், கூட்டணி, வேட்பாளர் தேர்வு, தொகுதி பங்கீடு என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன.

இதனிடையே, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகமும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை, தேர்தல் வியூகம் உள்பட பல்வேறு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. 

இந்த நிலையில் பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக தலைமை அலுவலக்தில் அக்கட்சி நிர்வாகிகள் இன்று போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆதவ் அர்ஜுனாவின் புகைப்படத்தை பேனரில் பயன்படுத்தியதற்காக வட்டச் செயலாளரை கட்சியில் இருந்து நீக்கியதாக திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அவர்கள் போரட்டம் நடத்தினர்.

கட்சியில் பதவி தருவதாக பலரிடம் பணம் வாங்கி ஏமாற்றியுள்ளதாகவும் அவர்கள் கோஷம் எழுப்பினர். 

Tags:    

மேலும் செய்திகள்