800 ஆண்டுகளுக்கு முன்பே விவசாய புரட்சி: காலிங்கராயன் தியாகத்தை போற்றுகிறேன் - எடப்பாடி பழனிசாமி

காலிங்கராயன் அமைத்த கால்வாய் மூலம் ஈரோடு மாவட்டத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
800 ஆண்டுகளுக்கு முன்பே விவசாய புரட்சி: காலிங்கராயன் தியாகத்தை போற்றுகிறேன் - எடப்பாடி பழனிசாமி
Published on

சென்னை,

நதிநீர் இணைப்பின் முன்னோடி என போற்றப்படும் காலிங்கராயன் தனது சொந்த செலவில் ஈரோடு மாவட்டத்தில் காலிங்கராயன் கால்வாயை அமைத்தார். இந்த கால்வாய் ஈரோடு மாவட்டம் பவானி காலிங்கராயன் பாளையத்தில் தொடங்கி, ஈரோடு வழியாக கொடுமுடி நொய்யல் ஆற்றில் முடிவடைந்தது. மொத்தம் 90 கிலோ மீட்டர் தொலைவில் காலிங்கராயன் கால்வாய் வெட்டி முடிக்கப்பட்டது. அவர் அமைத்த காலிங்கராயன் கால்வாய் மூலம் ஈரோடு மாவட்டத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

இந்தநிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்,

பாண்டிய மன்னன் சடையவர்மன் வீரபாண்டியனின் படைத் தளபதியாக இருந்தவரும், தனது விடா முயற்சியாலும் நம்பிக்கையாலும், கொண்ட கொள்கையில் இருந்து வழுவாது, 90கிலோமீட்டர் வரை செல்லும் காலிங்கராயன் கால்வாயை அமைத்து, வறண்ட பகுதிகளிலும் பாசன வசதி செய்து தந்து, சுமார் 800ஆண்டுகளுக்கு முன்பே விவசாய புரட்சியை தமிழ்நாட்டில் மேற்கொண்டவருமான காலிங்கராயன் அவர்களின் நினைவாக கொண்டாடப்படும் தை 5ஆம் நாளான காலிங்கராயன் தினத்தில், அவர்தம் தியாகத்தையும் புகழையும் போற்றி வணங்குவதுடன்...

கடந்த 2018ஆம்ஆண்டு ஈரோட்டில் காலிங்கராயன் அவர்களின் மணிமண்டபத்தை நான் திறந்துவைத்ததையும் இவ்வேளையில் நினைவுகூர்கிறேன்.

இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com