வரும் 5ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

பன்னீர்செல்வம், தினகரன், செங்கோட்டையன் ஒன்றாக சந்தித்த நிலையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 5ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
Published on

அதிமுக தலைமைச் செயலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், 5.11.2025 புதன் கிழமை காலை 10.30 மணிக்கு, மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க.வில் இருந்து முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நீக்கப்பட்ட நிலையிலும், ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன், கே.ஏ.செங்கோட்டையன் ஒன்றாக சந்தித்த நிலையிலும் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com