திமுக அரசை கண்டித்து நாமக்கல்லில் 4-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்

திமுக அரசை கண்டித்து நாமக்கல்லில் 4-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.;

Update:2025-12-31 13:46 IST

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட, நாமக்கல் மாவட்டம், கபிலர்மலை ஒன்றியம், பிலிக்கல்பாளையம் முதல் கொடுமுடி வரை, காவிரி ஆற்றின் குறுக்கே உயர்மட்டப் பாலம் அமைப்பதற்கான திட்டத்தை, அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு கிடப்பில் போட்டு வைத்திருக்கும் விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்தும்; மக்கள் நலன் கருதி உயர்மட்டப் பாலம் அமைக்கும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்திட வலியுறுத்தியும்,

நாமக்கல் மாவட்ட அதிமுக சார்பில் 4.1.2026 (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணியளவில், கபிலர்மலை ஒன்றியம், பிலிக்கல்பாளையம், மல்லிகாபுரம் பேருந்து நிறுத்தம் அருகில், கழக அமைப்புச் செயலாளரும், நாமக்கல் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி. தங்கமணி எம்.எல்.ஏ. தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர், கழக சட்டமன்ற உறுப்பினர், கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

திமுக மாடல் ஸ்டாலின் அரசைக் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்