அமித்ஷாவின் வருகை தமிழக அரசியலில் புதிய திருப்பங்களை ஏற்படுத்தும்: பாஜக
உள்துறை மந்திரி அமித்ஷாவின் வருகை தமிழக அரசியலில் புதிய திருப்பங்களை ஏற்படுத்தும் என தமிழக பாஜக தெரிவித்துள்ளது.;
சென்னை,
தமிழக பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நடத்தி வரும் "தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்" யாத்திரை நிறைவு விழாவில், தமிழகத்தில் தி.மு.க.வை விரட்டியடித்து வளர்ச்சி பாதையில் தமிழகத்தை உருவாக்குவேன் என்ற பிரதமர் மோடியின் சபதத்தை நிறைவேற்ற புதுக்கோட்டை வர இருக்கும் உள்துறை மந்திரி அமித்ஷாவின் வருகை தமிழக அரசியலில் புதிய திருப்பங்களை ஏற்படுத்தும்.
2026 சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். தமிழகம் வலிமை பெறும், வளர்ச்சி பெறும். தேசிய ஜனநாயக கூட்டணியின் தமிழக மக்களின் நம்பிக்கை பெற்ற தலைவர்களாக, தமிழகத்தை காப்பாற்ற ஒரே சிந்தனையுடன் போராடி வரும் எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன் இரு வரும் இரட்டை குழல் துப்பாக்கிகளாக ஒன்றிணைத்து, தி.மு.க. ஆட்சியை சுட்டு வீழ்த்தும் சுதர்சன சக்கர வியூக தலைவராக அமித்ஷா புதுக்கோட்டையில் புதிய சரித்திரம் படைக்க இருக்கிறார்.தமிழகத்தின் வளர்ச்சியிலும் தமிழரின் மகிழ்ச்சியிலும் தமிழ் மொழியின் பெருமையிலும் மறுமலர்ச்சியை உருவாக்கி, வீழ்ச்சி அடைந்த மாட்சிமை பொருந்திய தமிழகமாக மாற்றி மக்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் ஆட்சியை 2026 சட்டமன்ற தேர்தல் வெற்றி மூலம் அமித்ஷா தமிழக மக்களுக்கு பரிசாக அளிக்க இருக்கிறார்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.