அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
சேவூர் ராமச்சந்திரனின் மகன்கள் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.;
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சேவூர் ராமச்சந்திரன். இவர் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக செயல்பட்டுள்ளார்.
இந்நிலையில், சேவூர் ராமச்சந்திரனின் வீட்டில் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். அவரின் மகன்களான விஜயகுமார், சந்தோர்குமார் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.