சென்னையில் நாளை மறுநாள் மின்தடை ஏற்படும் இடங்கள்
பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.;
சென்னை,
தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
சென்னையில் நாளை மறுநாள் (22.01.2026) அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
மாதவரம்: வடபெரும்பாக்கம் வி.எஸ்.மணி நகர், கே.வி.டி. கார்டன், செயலக காலனி, மாசிலாமணி நகர், டைடல் நகர், லாரி பார்க்கிங் யார்டு, ஆண்டாள் நகர், அப்துல்கலாம் நகர், கிருஷ்ணா நகர், இந்தியா கேட் சாலை, கோத்தாரி சாலை, திருப்பதி தேவஸ்தானம் நகர், யூசப் காலனி, கண்ணா நகர், சாமுவேல் நகர் விரிவாக்கம், சரஸ்வதி நகர், கந்தசாமி நகர், சின்னத் தோப்பு, ரங்கா கார்டன், அன்பு வளர்மதி நகர், டி.ஜி. சாமி நகர், சுமங்கலி நகர் மற்றும் விநாயகபுரம்.
அம்பத்தூர்: இராமாபுரம், வரதராஜபுரம், டீச்சர்ஸ் காலனி, பஜ்சர், எம்டிச் சாலை, சிவானந்தா நகர், அன்னை சத்யா நகர், எம்கேபி நகர், காமராஜபுரம், வானகரம் ரோடு, விஜிஎன் சாந்தி நகர், திருவேங்கட நகர், சோழபுரம், அம்பத்தூர் ஓ.டி, வெங்கடாபுரம், கிருஷ்ணாபுரம், பரிதிவிபாக்கம்.
குன்றத்தூர்: மாதா மருத்துவமனை, குயாவர் தெரு, தண்டலம், அலெக்ஸ் நகர், பாரதி நகர், சந்திரசேகரபுரம், முதலியார் தெரு, எவரெஸ்ட் கார்டன், சதனந்தபுரம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.