குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க அனுமதி...!

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது.;

Update:2025-10-26 08:57 IST

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதனால் தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 16ம் தேதி முதல் குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், குற்றால மெயின் அருவில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு இன்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு குறைந்து அருவில் நீர் வரத்து சீரானதையடுத்து குற்றால மெயின் அருவில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்